சிரியா மக்களுக்கு உடனடி உதவி தேவை

டமாஸ்கஸ்: சிரியாவில் முற்றுகை யிடப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகவும் இதனால் விமானம் மூலம் அத் தியாவசியப் பொருட்களை விநி யோகிப்பது மிகவும் அவசியம் என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இத்தகைய மனிதாபிமான உதவி குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு மன்றம் வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அந்த நாடுகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. உலகத் தலைவர்கள் கண்ட இணக்கத்தின்படி சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை ஜூன் முதல் தேதிக்குள் விநியோகிக்க வேண்டும் என்ற கால வரம்பை மதித்து நடக்க சிரியா அரசாங்கம் தவறிவிட்டதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

சிரியா அரசாங்கப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட டாராயா புறநகர் பகுதியில் வசிக்கும் சுமார் 4,000 பேர் 2012ஆம் ஆண்டு முதல் உணவு இல்லாமல் தவித்து வருவதாக ஐநா கூறுகிறது. நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஒரு லாரி புதன்கிழமை அப்பகுதியை சென்றடைந்ததாகவும் ஆனால் குறைந்த அளவிலான மருந்துப் பொருட்களும் உணவு அல்லாத மற்ற பொருட்களும் அந்த லாரியில் இருந்ததாகவும் கூறப் பட்டது.

ஆயிரக்கணக்கான மக் களுக்கு அத்தியாவசியப் பொருட் கள் தேவைப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஜான் கிர்பி கூறினார். விமானம் மூலம் உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் எவ்வாறு மக்களுக்கு விநியோகிப் பது என்பது குறித்து அமெரிக் காவுக்கு ஐநா உணவு அமைப்பு சுருக்கமாக விளக்கம் அளித் துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!