இந்தியா=பங்ளாதேஷ் எல்லை முழுதும் மூடல்

புதுடெல்லி: இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் ஊடுருவல் பிரச்சி னையை எதிர்நோக்கும் இந்தியா, அடுத்த ஆண்டில் அந்தப் பகுதி யில் உள்ள எல்லையை முழுமை யாக மூட முடிவு செய்துள்ளது. பங்ளாதேஷ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் பலர் ஊடுருவி வருகின்றனர். இதனைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் மத் திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா= பங்ளாதேஷ் எல்லையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழுமையாக மூட அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி எல்லை ஊடுருவலைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் அசாம் மாநிலத் தில் ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி இந்திய=பங் ளாதேஷ் எல்லை மூடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே ஊடுருவல் பிரச்சினை குறித்துப் பேசிய அசாம் மாநில முதல்வர் சர் பானந்த சோனோவால், “பங்ளா தேஷ் எல்லை நிரந்தரமாக மூடப் பட்டால் ஊடுருவல் தானாக குறையும்.

இதுதவிர ஊடுரு வலைத் தடுப்பதற்கு எல்லை யோரம் வசிக்கும் மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும்,” என்றார். “இந்தியா–பாகிஸ்தான் எல் லையில் உள்ள வாகா எல்லைச் சாவடியைப் போல பங்ளாதேஷ் எல்லையில் சாவடி அமைக்கப் படும். “வாகா எல்லையில் நடை பெறும் நிகழ்ச்சிகளைப்போல இங்கும் ஏற்பாடு செய்யப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்,” என்று அவர் கூறினார்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்