அமெரிக்கா மேற்கொள்ளும் பயிற்சியில் சீனாவின் போர்க்கப்பல்கள்

பெய்ஜிங்: அமெரிக்கா மேற் கொள்ளவிருக்கும் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியில் பங்கு கொள்ள சீனா அதன் ஐந்து போர்க்கப்பல்களை அனுப்ப விருப்பதாக சீனாவின் கடற்படை தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்கா ஜுன், ஜூலை மாதங்களில் ஹவாயியில் கடற் படைப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. தென்சீனக் கடல் பகுதி தொடர்பாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் சீனாவின் கப்பல்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக சீனாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.