டிரம்ப்- ஆதரவாளர்கள் மீது எதிர்ப்பாளர்கள் தாக்குதல்

வா‌ஷிங்டன்: கலிஃபோர்னியாவில் நடந்த ஒரு பேரணியின்போது குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பின் ஆதரவாளர்களுக்கும் அவரை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு போலிஸ் வாகனத்தை வழிமறித்து பின்னர் மாநாட்டு நிலையத்தின் வாகனம் நிறுத்தும் இடத்திற்குள் நுழைந்தனர். அங்கு கூடியிருந்த டிரம்பின் ஆதரவாளர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் முட்டைகளை வீசித் தாக்கியதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே குடியரசுக் கட்சி செனட் சபை சபாநாயகர் பால் ரயன், டிரம்பிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்..

Loading...
Load next