போராளிகள் பயிற்சி முகாமை பிலிப்பீன்ஸ் ராணுவம் கைப்பற்றியது

மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதியில் உள்ள காட்டுப் பகுதி யிலிருந்து போராளிகளை விரட்டி யடிக்க ராணுவத்தினர் கடந்த பத்து நாட்களாக அவர்களுடன் கடுமையாக சண்டையிட்டு வந் தனர். இந்நிலையில் போராளி களின் பயிற்சி முகாமை பிலிப்பீன்ஸ் படையினர் கைப்பற்றி யுள்ளதாக பிலிப்பீன்ஸ் ராணுவத் தளபதி ஒருவர் கூறியுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை ஆதரித்து வரும் ஆயுதம் ஏந்திய பல குழுக்கள் பிலிப்பீன்சில் உள்ளன. அவற்றுள் ஒன்றான ‘மவுட்’ என்ற போராளிகள் குழுவுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது.

அத்தாக்குதலில் போராளிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 15 வீரர்கள் காயம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 100 பேரைக் கொண்ட மவுட் குழு பிலிப்பீன்சில் குண்டு வைத்து தகர்த்தல், ஆட்கடத்தல், பிணையாளிகளின் தலையைத் துண்டித்து கொலை செய்தல் போன்ற அட்டூழியங்களில் ஈடு பட்டு வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Loading...
Load next