குடியேறிகள் சென்ற படகு கிரீஸ் அருகே மூழ்கியதில் பலர் பலி

ஏதென்ஸ்: குடியேறிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு வெள்ளிக்கிழமை கிரீஸ் அருகே உள்ள கிரீட் தீவில் மூழ்கியதில் பலர் உயிரிழந்ததாக அந்நாட்டு கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். விபத்தைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் 340 பேரைக் காப்பாற்றியுள்ளனர். அப்படகில் சென்ற இன்னும் பலரைக் காணவில்லை என்று கூறப்படும் வேளையில் லிபிய கடலோரத்தில் 117 குடியேறிகளின் சடலங்கள் ஒதுங்கியுள்ளதாக லிபிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இதுவரை 117 சடலங்களை மீட்டுள்ளதாகவும் அவற்றுள் 70 விழுக்காடு சடலங்கள் பெண் களின் சடலங்கள் என்றும் ஆறு சிறுவர்களும் இறந்தவர்களுள் அடங்குவர் என்றும் லபிய நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

படகு விபத்தில் இறந்தவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் கண்டறியப் படவில்லை. அந்தப் படகில் குறைந்தது 700 குடியேறிகள் சென்றதாக குடியேறிகளுக்கான அனைத் துலக அமைப்பு ஒன்று கூறுகிறது. அப்படகு எங்கிருந்து புறப்பட்டது? எந்த நாட்டை நோக்கிச் சென்றது? என்பது இன்னும் தெளிவாகத் தெரிய வில்லை. இருப்பினும் அப்படகு ஆப் பிரிக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது என்று ஒர் அமைப்பு கூறுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!