பாரிஸ் ஆற்றில் வெள்ளநீர் சிறிது வடிந்தது

பாரிஸ்: தொடர்ந்து பெய்யும் கன மழையாலும் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பாரிஸ் நகரில் உள்ள செய்ன் ஆற்றில் நீர்மட்டம் ஆறு மீட்டர் உயர்ந்துள்ளது என்றும் அடுத்த சில மணி நேரங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரி கள் அறிவித்திருந்த நிலையில் அந்த ஆற்றில் நீர் மட்டம் சற்று குறைந்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். செய்ன் ஆற்றில் நீர் மட்டம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரக்கூடும் என்று முன்னதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்யும் கன மழையால் பல இடங்களில் மோச மான வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. இப்பேரிடரில் சிக்கி மத்திய ஐரோப்பாவில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். பாரிஸ் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் ரயில் நிலையங் கள் மூடப்பட்டுள்ளன. விலை மதிப்பில்லாத கலைப் பொருட் களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதியாக பாரிசிலுள்ள உலகப் புகழ்பெற்ற இரு அரும்பொருளகங்கள் மூடப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறு கின்றன. பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஒரு சில இடங்களிலிருந்து மக்கள் வெளி யேற்றப்பட்டுள்ளனர்.