வியட்னாமில் விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்; பலர் கைது

ஹனோய்: வியட்னா­மி­ன் கடற்­கரை­களில் இரு மாதங் களுக்கு முன்பு மீன்கள், கடல்­வாழ் உயி­ரி­னங்கள் பல செத்து கரை­யொ­துங்­கி­யது தொடர்­பான விசா­ரணையை ஒளி­வு­மறை­வின்றி நடத்­தக் கோரி நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் இறங்­கிய பலர் ஹனோய், ஹோ சி மின் சிட்­டி­யில் கைது செய்­யப்­பட்­ட­னர். இவ்விரு நக­ரங்களின் தெருக்­கள் நேற்று வெறிச்­சோ­டி­யி­ருந்தா­லும் சமூக வலைத்­த­ளங்களின் வழி­யா­கக் கைது குறித்த தக­வல்­கள் பரவின.

‘ஃபார்­மோசா’ எனும் தைவானிய நிறு­வ­னம் வியட்னா­மில் நடத்­தும் இரும்பு ஆலைக்கு அருகே மீன்கள் இறந்த­தால் அந்த நிறு­வ­னமே மீன்களின் இறப்­புக்­குக் காரணம் என ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளால் நம்பப்­படு­கிறது. “விசாரணை கோரு­வோ­ரி­டம் அடக்­கு­முறையைக் கையா­ளு­வதை விடுத்து மீன்கள் இறந்துபோனதற்கான காரணம் குறித்து அர­சாங்கம் விசாரணை நடத்த வேண்டும்,” என வி­யட்னா­மின் மனித உரிமை­கள் கண்­கா­ணிப்பு அதிகாரி ஃபில் ராபர்ட்­சன் கூறி­யுள்­ளார்.

Loading...
Load next