அதிபர் வேட்பாளராவதற்கு ஹில்லரிக்கு போதிய வாக்குகள்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்குத் தேவையான வாக்குகளைத் திருமதி ஹில்லரி கிளின்டன் பெற்றுவிட்டதாகச் செய்தி நிறுவனத் தகவல் கூறுகிறது. அக்கட்சி வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு 2,383 பிரதி நிதிகளின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிலையில் கலிஃபோர்னிய மாநிலத்தில் நடந்த தேர்தலில் தேவையான வாக்குகளை அவர் பெற்றுவிட்ட தாகக் கூறப்படுகிறது.

ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு ஹில்லரி வேட்பாளராகத் தேர்வு செய்யப் படுவது உறுதி என்று தெரிகிறது. அக்கட்சி அதிகாரபூர்வமாக ஹில்லரியை வேட்பாளராக அறி வித்தால் அக்கட்சியின் முதல் பெண் அதிபர் வேட்பாளர் என்று பெருமையை அவர் பெறுவார். ஆறு மாநிலங்களில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மேலும் அதிகமான பிரதிநிதிகளின் ஆதரவை ஹில்லரி பெறுவார் என அவரது பிரச்சார மேலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

கலிஃபோர்னியாவில் தமது ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஹில்லரி. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி