துருக்கி குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, பலர் காயம்

இஸ்தான்புல்: துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் போலிஸ் வாகனத்தின் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப் பட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பரபரப்பான காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி யில் சென்றுகொண்டிருந்த போலிஸ் வாகனத்தைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தானி யக்க கருவியைப் பயன்படுத்தி கார் குண்டை வெடிக்கச் செய்த தாக தகவல்கள் கூறுகின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சதுக் கத்திற்கு அருகே குண்டு வெடித்ததாகவும் அந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் நால்வர் பொதுமக்கள் என்றும் மற்ற 7 பேர் போலிஸ் அதிகாரிகள் என்றும் இஸ்தான்புல் மேயர் வசிப் சகின் கூறினார்.

அந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 36 பேர் காயம் அடைந்ததாகவும் அவர் சொன்னார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதி கரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் நேற்றைய தாக்கு தலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

துருக்கியில் குர்தியப் போராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று போலிஸ் வாகனத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் போலிஸ் அதிகாரிகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பில் ஒரு வாகனம் முழுமையாக சேதம் அடைந்தது. நேற்றையத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.படம்: ராய்ட்டர்ஸ்