மேலும் 5 மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது

கோலாலம்பூர்: மலேசிய குடிநுழைவு கட்டமைப்பில் நாச வேலை செய்ததன் தொடர்பில் மேலும் ஐந்து குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று ஐவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய போலிஸ் தலைவர் காலித் அபு பக்கர் சொன்னார். "நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இதுவரை பத்து பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ஆவணங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார். மலேசிய குடிநுழைவு கட்டமைப்பில் சதி வேலை செய்த கும்பலின் தலைவனை மலேசிய போலிசார் அடை யாளம் கண்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!