டெல் அவிவ்: தலைநகர் டெல் அவிவில் துப்பாக்கிக்காரர்கள் சுட்டு நால்வர் கொல்லப்பட்டதால் 83,000 பாலஸ்தீனர்களுக்கு நுழைவதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேலில் தற்காப்பு அமைச் சுக்கு அருகே சரோனா சந்தையில் இரு இடங்களில் தாக்குதலில் மேற்கு கரையைச் சேர்ந்த இரு பாலஸ்தீனர்கள் சரமாரியாகச் சுட்டனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஹெப்ரானுக்கு அருகே யட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒன்று விட்ட சகோதரர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்று போலிசார் கூறினர்.
அவர்களில் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் மேற்கு கரையை தளமாகக் கொண்ட பாலஸ்தீன அதிகாரிகள், தாக்குதல் குறித்து கருத்து எதுவும் வெளியிடவில்லை. துப்பாக்கிச் சூட்டில் 39, 32 வயது இரண்டு பெண்களும் 42, 58 வயது இரண்டு ஆண்களும் கொல்லப்பட்டனர். இதில் 16 பேர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட எழுவரில் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று போலிசார் தெரி வித்தனர். மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் ஆம் புலன்ஸ் வாகனங்கள் வருவதையும் காணொளிப் படங்கள் காட் டின.
துப்பாக்கியால் சுட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். காயமடைந்த மற்றொரு சந்தேக நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி