கோழிக் குழம்பில் விழுந்த பறவை நிறம் மாறியது

வேல்ஸ்: உணவு தேடி அலைந்த கடற்பறவை ஒன்று வேல்ஸ் நகரில் உள்ள உணவு தொழிற்சாலையின் குப்பைத் தொட்டியில் கொட்டிக்கிடந்த மசாலா' கோழிக் குழம்பில் தவறி விழுந்துவிட்டது. நல்லவேளையாக அங்கிருந்த ஊழியர்கள் அந்தக் கடல் பறவையைக் காப்பாற்றிவிட்டனர். இருப்பினும் வெண்மை நிறமாக இருந்த அந்த கடல் பறவையின் நிறம் ஆரஞ்சு நிறமானது. அந்தப் பறவையைக் காப்பாற்றிய ஊழியர்கள் மருத்துவமனையின் தொண்டூழியர் ஒருவரிடம் அதை ஒப்படைத்தனர்.

குளிப்பாட்டியதைத் தொடர்ந்து அந்த கடற்பறவை வெள்ளை நிறத்திற்கு மீண்டும் மாறியது. ஆனால் கோழிக்கறியின் வாசம் தொடர்ந்து வீசியது. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள், கூண்டில் வைக்கப்பட்ட அந்த பறவையின் எடையை அதிகரிக்க அதற்கு உணவு வழங்கி பேணிக்காத்து வருகிறார்கள்.

கோழிக் குழம்பில் விழுந்த வெள்ளை நிற கடல் பறவை ஆரஞ்சு நிறமானது. அதன் பழைய வெண்மை நிறத்திற்கு கொண்டுவர ஊழியர்கள் சிரமப்பட்டனர். படம்: ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!