சுங்கை புசாரில் தலைகாட்டிய மகாதீர்; எதிர்க்கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம்

சுங்கை புசார்: அடுத்த வாரம் சுங்கை புசாரில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில் எதிர்க் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் தோன்றிய முன்னைய பிரதமர் மகாதீர் முகம்மது பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். திரு மகாதீர் தமது துணைவியார் ஹஸ்மா முகம்மது அலியுடன் நேற்று ஹாவ் சியாங் சி என்ற சீன உணவகத்தில் நடைபெற்ற சிறப்பு குடிமக்கள் பிரகடனக் கூட் டத்தில் கலந்து கொண்டார்.

அம்னோவிலிருந்து விலகிய பிறகு எதிர்க்கட்சிகளுக்கு ஆதர வாக டாக்டர் மகாதீர் வெளிப் படையாக பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. டிஏபி என்று அழைக்கப்படும் ஜனநாயக செயல் கட்சி ஏற்பாடு செய்த '1எம்டிபியும் 2.6 பில்லியன் ரிங்கிட் ஊழலும்' கருத்தரங்கில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் பங்கேற்றனர். முன்னைய சிலாங்கூர் முதல்வர் முகம்மட் முகம்மட் தாயிப், டிஏபியின் தேசிய ஆலோசகர் லிம் கிட் சியாங் உட்பட பலர் வந்திருந்தனர். திரு மகாதீரும் அவரது துணைவியாரும் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பக்கத்தில் அமானா கட்சி வேட்பாளர் அஸ்ஸார் அப் ‌ஷுகுரும் அவரது மனைவியும் உட்கார்ந் திருந்தனர்.

எதிர்க்கட்சி கூடாரத்தில் அதிரடியாகத் தோன்றி அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்திய முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!