விமானிகள் வேலை நிறுத்தம்; காற்பந்து ரசிகர்கள் தவிப்பு

பாரிஸ்: பிரான்சில் காற்பந்து ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு களுடன் யூரோ 2016 காற்பந்துப் போட்டி தொடங்கியிருக்கிறது. ஆனால் அடுத்த நாளே விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான காற்பந்து ரசிகர்கள் தவிப்புக்கு ஆளாகியிருக்கின்ற னர். விமானிகளின் நான்கு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்றுத் தொடங்கியது. இதனால் 30 விழுக்காடு விமானச் சேவை களை ஏர் பிரான்ஸ் ரத்து செய்தது. தொழிலாளர் சட்டத்தில் அர சாங்கம் செய்துள்ள சீர் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. புதிய தொழிலாளர் சட்டம், ஊழியர்களை எளிதில் சேர்க்கவும் நீக்கவும் வகை செய்கிறது.

வேலை நிறுத்தத்தில் குதித் துள்ள நான்கு பெரிய சங்கங்களில் விமானிகளின் சங்கமும் ஒன்று. சென்ற புதன்கிழமையிலிருந்து துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பாரிஸ் நகரின் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் ரயில்வே ஊழியர்களின் ஒன்பது நாள் வேலை நிறுத்தம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக ரயில் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியிருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!