குத்துச்சண்டை மன்னன் முகமது அலிக்கு இறுதி அஞ்சலி

குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முகமது அலியின் உடல் அவரது சொந்த ஊரான லூயிஸ் வில்லில் அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முகமது அலி, 74வது வயதில் இம்மாதம் 4ஆம் தேதி காலமானார். அவரது உடல் காரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளின்டன், ஹாலிவுட் நடிகர் பில்லி கிறிஸ்டல், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, துருக்கி அதிபர் தாயிப் எர்டோகான், முன்னாள் குத்துச் சண்டை வெற்றியாளர் லீனாக்ஸ் லுவிஸ் உட்பட பல பிரமுகர்கள் பங் கேற்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!