ரயானி ஏர் விமான நிறுவன உரிமம் ரத்து

கோலாலம்பூர்: ரயானி ஏர் விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் ரத்து செய்தது. ரயானி ஏர், விமானச்சேவை வழங்குவதற்கான நிபந்தனைகளை மீறி விட்டதாகவும் ஒரு வர்த்தக விமான நிறுவனமாக தொடர்ந்து இயங்க போதுமான நிதி வசதியோ நிர்வாகத் திறனோ அதனிடம் இல்லை என்றும் அந்த ஆணையம் ஓர் அறிக்கையில் கூறியது. ‚அதன் விளைவாக ரயானி ஏர் ஒரு வர்த்தக விமான நிறுவனமாக செயல்பட முடியாது என்று அந்த அறிக்கை தெரிவித்தது. இந்நிலையில் விமானச் சேவையைத் தொடர இன்னொரு வாய்ப்பு தருமாறு ரயானி ஏர் கேட்டுக் கொண்டுள்ளதாக மலேசியத் தகவல்கள் கூறுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!