அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு பற்றிய விவாதம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆர்லாண் டோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அங்கு துப்பாக்கி கட்டுப்பாடு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் அமெரிக் காவில் 58 பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் உயிரிழந்ததாகவும் அவர்களில் பெரும்பான்மையினர் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக் கிச்சூட்டு சம்பவங்களில் உயிரிழந் ததாகவும் புள்ளிவிவரத் தகவல் கள் கூறுகின்றன. அமெரிக்கா தோற்றுவிக்கப் பட்டது முதல் 1968ஆம் ஆண்டி லிருந்து அமெரிக்காவில் 1.5 மில்லியன் பேர் துப்பாக்கிச் சூட்டி னால் உயிரிழந்ததாகவும் அத் தகவல் கூறுகிறது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங் களில் பலர் உயிரிழப்பதைத் தவிர்க்கவும் குற்றவாளிகளின் கைகளில் துப்பாக்கி கிடைப்பதைத் தடுக்கவும் அமெரிக்காவில் கடுமையான துப்பாக்கிச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் அமெரிக்காவின் இரு நாடாளுமன்ற அவைகளின் ஒப்புதல் கிடைக்காததால் அவரது முயற்சி இதுவரை வெற்றி பெற வில்லை. இந்நிலையில் ஆர்லாண்டோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம், துப்பாக்கி சட்டங்கள் இங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதாக திரு ஒபாமா கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!