சீனாவில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்

பெய்ஜிங்: சீனாவின் குவாங்சி மாநிலத்தில் கடந்த சில நாட் களாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் இன்னும் சிலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். பல இடங்களில் புயல் காற்று வீசுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு கனமழை வரும் நாட் களிலும் தொடர்ந்து மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத் துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

கொட்டும் மழையில் அன்றாடப் பணிகளைச் செய்ய பலர் சிரமப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தங்கள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின் றனர். இதனால் வெள்ளநீரில் பல வாகனங்கள் சிக்கிக்கொண்ட நிலையில் போக்குவரத்து பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரால் நாட்டின் பொருளியலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சீனாவின் குவாங்சி மாநிலத்தில் உள்ள லியுசோவ் நகரில் சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீரில் சிக்கிய பல வாகனங்கள் தலைகீழாக விழுந்து கிடக்கும் நிலையில் பலர் குடைகளைப் பிடித்த வண்ணம் தெருக்களை கடந்து செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!