துப்பாக்கிக்காரன் மனைவி மீது குற்றம் சாட்டப்படலாம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் ஆர்லாண்டோ கேளிக்கை விடுதியில் 49 பேரை சுட்டுக் கொன்ற ஓமர் மட்டீன் என்ற துப்பாக்கிக்காரனின் மனைவி நூர் சல்மான் மீது குற்றம் சாட்டப்படலாம் என்று சட்ட அமலாக்கத் துறை தகவல் கூறியது. நூர் சல்மானிடம் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் மீது விரைவில் குற்றம் சாட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. ஓமர் மட்டீனின் மனைவி நூர் சல்மான், அவரது கணவரின் திட்டங்கள் குறித்து அறிந்திருக்கலாம் என்றும் அவர் தான் அறிந்த தகவல்களை வெளிப்படுத்தாமல் இருந்ததற்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம் எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓமர் மட்டீன் இந்த தாக்குதலை நடத்த வேண்டாம் என தனது கணவரை இணங்க வைக்க முயன்றார் என தெரிவித்துள்ளது அமெரிக்காவின் என்பிசி தகவல் கூறுகிறது.

அத்தாக்குதல் பற்றி தன் கணவருடன் பேச முயன்றதாக நூர் சல்மான் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்றுகூடும் பல்ஸ் இரவு கேளிக்கை விடுதிக்கு தன் கணவர் மட்டீனை ஒரு தடவை அழைத்துச் சென்றதை நூர் சல்மான் அமெரிக்க புலனாய்வுத் துறையினரிடம் கூறியதாகவும் என்பிசி நியூஸ் தகவல் தெரிவித்தது. போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஓமர் மட்டீன் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக அவரின் முன்னாள் மனைவி கூறியுள்ளார்.

ஓமர் மட்டீனின் மனைவி நூர் சல்மான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!