டிரம்ப்பின் யோசனைக்கு ஒபாமா கண்டனம்

வா‌ஷிங்டன்: முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் கூறிய யோசனையை அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாகச் சாடியுள்ளார். ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பின்னர் திரு டிரம்ப் கூறிய கருத்துக்கு ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரம்ப் கூறிய அந்த யோசனை பயங்கரவாதிகளின் பிரச்சாரத்தை மேலும் தூண்டும் என்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை அது குறைத்துவிடும் என்றும் திரு ஒபாமா தெரிவித்துள்ளார். அந்த யோசனை நாம் விரும்பும் அமெரிக்காவை உருவாக்காது என்றும் திரு ஒபாமா கூறினார்.

வெள்ளை மாளிகையில் திரு ஒபாமா உரையாற்றியபோது டிரம்ப் கூறிய யோசனையைக் கடுமை யாகச் சாடிப் பேசினார். டிரம்ப் கூறுவது போல் முஸ்லிம் அமெரிக் கர்களை நாம் வித்தியாசமாக நடத்தினால் மேற்கத்திய நாடு களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய பிளவை அது ஏற்படுத்தும். இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பும் குறையும் என்றும் திரு ஒபாமா விளக்கினார். முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை டிரம்ப் பின்பற்று வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவுக்குள் முஸ்லிம்களை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என டிரம்ப் பிரசாரம் செய்து வருகிறார். இது ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையே வன்முறை யாளர்களாக சித்தரிக்கும் முயற்சி என்றும் திரு ஒபாமா குறிப்பிட்டார்.

திரு ஒபாமா வா‌ஷிங்டனில் தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!