முதலை இழுத்துச் சென்ற சிறுவன் உடல் கண்டுபிடிப்பு

லாஸ் ஏஞ்சலஸ்: புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவின் டிஸ்னி வோர்ல்ட் ரிசோர்ட் அருகே முதலை இழுத்துச் சென்ற இரண்டு வயது சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லேன் கிரேவ்ஸ் என்று அடை யாளம் காணப்பட்ட சிறுவனின் உடல் முழுமையாக இருந்ததாக புதன்கிழமை மதியம் காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் பிரேதப் பரிசோத னைக்குப் பிறகு உறுதி செய்யப் படும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். செவ்வாய் இரவு 9.00 மணி அளவில் ஏரி நீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை முதலை கவ்வி இழுத்துச் சென்றது. அதனைத் தொடர்ந்து ஹெலி காப்டர் உதவியுடன் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சிறுவனைத் தேடி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சிறுவனின் உடல் மட்டுமே தற்போது மீட்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!