மின்படிக்கட்டில் சிக்கிய சிறுமி

மலாக்கா: ஆயர் கெரோவில் உள்ள பேரங்காடிக்கு பெற் றோருடன் சென்ற மூன்று வயது சிறுமியின் கை மின் படிக்கட்டில் சிக்கிக் கொண் டது. புதன்கிழமை காலை நடைபெற்ற சம்பவத்தில் தீ அணைப்பு, மீட்புப்படையினர் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக போராடி சிறுமியின் வலதுகையை விடுவித் தனர். பின்னர் கையில் ஏற்பட்ட சிறுகாயங்களுக்காக சிறுமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.