எகிப்திய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

கெய்ரோ: மே மாதம் கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்திய விமானம் ஒன்றின் 2வது கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாக எகிப்திய விசாரணைக் குழு வினர் தெரிவித்துள்ளனர். மே 19ஆம் தேதி மத்திய தரைக்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம் எந்த வேகத்தில் சென்றது? எந்த திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது? போன்ற தகவல் களை அறிய அந்த கறுப்புப் பெட்டியில் பதிவாகியுள்ள விவரங் கள் உதவியாக இருக்கும் என்று விசாரணைக் குழுவினர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். வரும் 23-ம் தேதிக்குள் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்காவிட்டால் அதில் உள்ள தகவல்களை மீட்க முடியாது என்று முன்னர் செய்திகள் வெளியாகின.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்திய தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் 'எகிப்து ஏர்' நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த மே மாதம் 19ஆம் தேதி புறப்பட்டது. இந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக சில மணி நேரத்தில் தெரியவந்தது. இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு எகிப்தின் அலெக்சாண்ட்ரிய நகரில் இருந்து 290 கி.மீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங் களும் பயணிகளின் சடலங் களும் கடலில் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கடலுக்கடியில் கிடப்பதாக கூறப்படும் விமானத்தின் முக்கிய பாகங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மொரீ‌ஷியஸ் மீட்புக் குழுவினர் கண்டுபிடித் துள்ள கறுப்புப் பெட்டியின் தகவல் களை ஆராயும் பணி நடந்து வருவதாக எகிப்து கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!