அபு சாயஃப் குழுவினரை ஒடுக்க மூன்று நாடுகள் கூட்டு நடவடிக்கை

கோத்தா பாரு: பிலிப்பீன்சில் பல அட்டூழியச் செயல்களில் ஈடுபட்டு வரும் அபு சாயஃப் போராளிகள் குழுவினரை ஒடுக்க இந்தோனீ சியா மற்றும் பிலிப்பீன்சுடன் சேர்ந்து மலேசியா பணியாற்ற இருப்பதாக மலேசிய தற்காப்புப் படைத் தலைவர் சூல்கிஃபிலி முகம்மது ‌ஷின் கூறினார். வெள்ளிக்கிழமை இரவு நடந்த நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டபின் பத்திரிகையாளர் களிடம் அவர் இதனைத் தெரி வித்தார்.

அபு சாயஃப் போராளிகளை ஒடுக்க பிலிப்பீன்ஸ் ஏற்கெனவே 5000 வீரர்களை சூலுக் பகுதிக்கு அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தோனீ சியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து மலேசியா பணியாற்ற விருப்பதாக அவர் சொன்னார். அத்துடன் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதின், சூலு, சுலவேசி கடல் பகுதி ரோந்து பணிகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இந்தோனீசிய பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுடன் பேச்சு நடத்துவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!