சுங்கை புசார், கோலா கங்சாரில் தேசிய முன்னணி வெற்றி

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சுங்கை புசார், கோலா கங்சார் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று அவ்விரு தொகுதிகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று அதிகாரபூர்வமற்ற வாக்கு எண்ணிக்கைகள் உணர்த்துவ தாக மலேசியத் தகவல் கூறியது. சுங்கை புசாரில் தேசிய முன்னணிக்கு 16,801 வாக்கு களும் அதற்கு அடுத்த நிலையில் பாஸ் கட்சி 9,643 வாக்குகளும் அமானா 3,270 வாக்குகளும் கிடைத்துள்ளதாக அத்தகவல் கூறியது. கோலா கங்சாரில் தேசிய முன்னணி 12,086 வாக்குகளும் பாஸ் கட்சி 7,633 வாக்குகளையும் அமானா கட்சி 3,270 வாக்கு களையும் பெற்றுள்ளன.

சுங்கை புசார் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவியது. தேசிய முன்னணி சார்பில் புடிமான் முகம்மது சோஹ்டி, பாஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான் மற்றும் அமானா கட்சியைச் சேர்ந்த அஸார் அப்துல் ‌ஷுக்குர் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த மே 5-ஆம் தேதி சரவாக்கில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை புசார் நாடாளுமன்ற உறுப்பினர் நோரியா கஸ்னோனும் கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகம்மது கைரிலும் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து இவ்விரு தொகுதி களிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடந்தன. கோலா கங்சாரில் தேசிய முன்னணி, பாஸ், அமானா மற்றும் சுயேச்சை வேட்பாளர் என நான்கு முனைப் போட்டி நிலவியது. சுங்கை புசாரில் 43,000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

கோலா கங்சார் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து போட்டியிட்ட மஸ்தூரா முகம்மது யாசிட் நேற்று காலை ராஜா பெரெம்புவான் முஸ்வின் இடைநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு மையத்தில் வாக்களித்தார். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!