இந்திய அரசு புதுப்பித்த யாழ்ப்பாண அரங்கம் திறப்பு

கொழும்பு: இந்தியா, அதன் பொரு ளியல் வளர்ச்சி அண்டை நாடு களுக்கும் பயனளிக்கும் என்பதை வலுவாக நம்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியா புதுப்பித்த விளையாட்டு அரங்கத்தை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் சேர்ந்து திறந்து வைத்த திரு மோடி இவ்வாறு கூறினார். புதுடெல்லியில் இருந்து காணொளி மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா அரங்கத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

"இரு நாடுகளுக்கு இடை யிலான உறவு எல்லையில்லாதது. ஆனால் செறிவான கலாசாரம், கலை, மொழி ஆகியவற்றில் உள் ளடங்கியிருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார். "துரையப்பா அரங்கம் பொரு ளியல் வளர்ச்சியின் அடையாளம்," என்றும் பிரதமர் மோடி குறிப் பிட்டார். இந்த நிலையில் அரங்க புதுப் பிப்புக்காக இந்தியா வழங்கிய நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறி சேன, "இந்தியாவுக்கும் இலங் கைக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் வரலாற்று நிகழ்வு இது," என்றார். முன்னைய யாழ்ப்பாண மேயர் மறைந்த ஆல்ஃபிரட் தம்பிராஜா துரையப்பா பெயரில் அமைக்கப் பட்டுள்ள விளையாட்டு அரங்கம் சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் இந்திய அரசு புதுப்பித்துள்ளது.

துரையப்பா அரங்கத்தின் திறப்பு விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேரடியாகவும் இந்தியப் பிரதமர் மோடி காணொளி மூலமாகவும் பங்கேற்றனர். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!