உலகில் அகதிகள் எண்ணிக்கை 65 மில்லியனை எட்டியது

ஜெனிவா: உள்நாட்டில் நடக்கும் சண்டை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உலகில் அகதிகளாக வாழ்வோரின் எண்ணிக்கை 65.3 மில்லியனை எட்டியிருப்பதாகவும் இது சாதனை அளவாகும் என்றும் அகதிகளுக்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய அகதிகள் எண்ணிக்கை, பிரிட்டிஷ் மக்கள் தொகையைவிட அதிகம் என்று என்று கூறப்படுகிறது.

2015-ம் ஆண்டின் முடிவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகம் முழுவதும் 65.3 மில்லியன் பேர் நெருக்கடி காரணமாக அகதிகளாகவும் அடைக்கலம் நாடுவோராகவும் இருப்பதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் அகதிகளின் எண்ணிக்கை 5 மில்லியன் அதிகரித்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

அனைத்துலக அகதிகள் தினத்தன்று இந்த அறிக்கையை ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம் வெளியிட்டுள்ளது. உலகில் முதல் தடவையாக அகதிகளின் எண்ணிக்கை 60 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.

அகதிகளில் பெரும் பாலானோர் சிரியா, ஈராக், ஆப்கான், சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஈராக்கிலிருந்து 4.4 மில்லியன் பேர் வெளியேறி யிருப்பதாகவும் அங்குள்ள ஃபலூஜா நகரிலிருந்து 84,000 பேர் வெளியேறியிருப்பதாகவும் ஐநா தூதரக அதிகாரி ஒருவர் கூறினார்.

இது குறித்து அகதிகளுக்கான ஐநா அமைப்பின் தலைவர் கூறும்போது, "உள்நாட்டுப் போர், துயரங்கள் காரணமாக சொந்த நாடுகளைவிட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் ஐ.நா. அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும். மனித நேயமே அகதிகள் பிரச் சினைக்கு சிறந்த தீர்வாகும்," என்று கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் அதிகம் தேவைப்படுவது மனித நேயமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சென்ற ஆண்டு மட்டும் கடல் வழியாக ஐரோப் பாவுக்கு 1,011,700 குடியேறிகளும் தரை வழியாக 35,000 பேரும் வந்து சேர்ந்ததாக குடியேறிகளுக் கான அனைத்துலக அமைப்பு ஒன்று கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!