மெக்சிகோவில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ள கல்வி சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை ஆசிரியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு மெக்சிகோவில் சாலை மறியல் போராட்டத்தில் ஆசிரியர் கள் ஈடுபட்டதைத் தொடர்ந்து போலிசார் அதில் குறுக்கிட்டதால் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் தெரிவித்தனர்.

அந்த மோதலில் போலிஸ் தரப்பில் 41 பேர் காயம் அடைந்த தாக அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார். பொதுமக்களில் 53 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

மோதலின்போது போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற் களை வீசியதாகவும் வாகனங் களை தீ வைத்துக் கொளுத்திய தாகவும் தகவல்கள் கூறின.

அதே வேளையில் கூட்டத்தினர் மீது போலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அரசாங்கம் அறிவித்துள்ள கல்வி சீர்திருத் தத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் கட்டாயத் தேர்வு எழுத வேண்டியிருப்பதால் அதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு குற்றச் சாட்டுகளின் பேரில் ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப் பதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீடிக்கும் இந்த ஆர்ப் பாட்டாங்களால் மெக்சிகோவில் பதற்றம் நிலவுகிறது.

மெக்சிகோவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது பல வாகனங்கள் தீக்கிரையாகின. கோழிகளை ஏற்றிச்சென்ற ஒரு வாகனமும் தீயில் நாசமானது. போலிஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பக்கமாக நடந்து செல்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!