பிரிட்டிஷ் ஊடகம்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன

லண்டன்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ கொத் துக் குண்டுகள் வீசப்பட்டன என்று பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழ் புகைப்பட ஆதாரத் துடன் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கை அரசுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின்போது, இலங்கையின் ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களி னால் பொதுமக்கள் கொல்லப் பட்டதை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் போரின்போது தடைசெய்யப்பட்ட ‘க்ளஸ்டர்’ கொத்துக் குண்டுகளை வீசிய தாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை அரசுக்கு அனைத்துலக அளவில் மேலும் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. அனைத் துலக அளவில் 100க்கும் மேற் பட்ட நாடுகளில் ‘க்ளஸ்டர்’ கொத்துக் குண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை உள்நாட்டுப் போரின்போது சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உயிரி ழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. இதனை இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளை வீசியது உண்மை தான் என்று தி கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தாக்குதல் நடந்த பள்ளிவாசலுக்கு முன்பு மலர்க்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் மக்கள். படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்த நியூசிலாந்து பிரதமர்

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகே மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தும் இளையர்கள். படம்: ஏஎப்பி

20 Mar 2019

நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: சந்தேகப் பேர் வழி கைது