ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத்திருக்க தலைவர்கள் முயற்சி

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் தில் பிரிட்டன் தொடர்ந்து உறுப்பு நாடாக இருக்குமா? அல்லது அதிலிருந்து பிரிட்டன் விலகுமா என்ற சர்ச்சை நீடிக்கும் வேளை யில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்பதே ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும் ஊடகங் களின் விருப்பமாக உள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத் திருப்பதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருப்பதற்கு ஆதர வாக பிரிட்டிஷ் மக்கள் வாக் ளிக்குமாறு வலியுறுத்தும் வகையில் டெய்லி மெயில் நாளிதழில் ஒரு முழு பக்க விளம்பரம் செய்துள்ளார்.

"முடிவு எடுப்பது உங்கள் கையில் உள்ளது. பிரிட்டனுடன் சேர்ந்து ஹங்கேரியும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதை நாங்கள் பெருமை யாகக் கருதுகிறோம்," என்று ஹங்கேரி பிரதமர் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து சென்றால் பின் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!