வெடிகுண்டு மிரட்டல்; பிரசல்ஸில் ஒருவர் கைது

பிரசல்ஸ்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் உள்ள ஒரு பேரங்காடி நிலையத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக நேற்று ஒருவன் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து போலிசார் அங்கு மேற்கொண்ட தீவிர சோதனையின் போது ஒருவனைக் கைது செய்தனர். மனநல பிரச்சினையுள்ள அந்த ஆடவர், உப்பும் ரொட்டியும் நிரம்பிய ஒரு போலி இடைவாரை இடுப்பில் கட்டியிருந்ததாக போலிசார் கூறினர். அந்த ஆடவர் முன்னதாக போலிசாருடன் தொடர்புகொண்டு தான் வெடிபொருள் வைத்திருப் பதாகக் கூறியதாக பெல்ஜிய ஊடகத் தகவல்கள் கூறின. இதனையடுத்து பிரசல்ஸில் அமைந்துள்ள சிட்டி2 எனப்படும் பரபரப்புமிக்க அந்த பேரங்காடி நிலையம் மூடப்பட்டது.

அவ்விடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டபோது சந்தேகத்திற்குரிய அந்த நபரைக் கைது செய்தனர். ஆனால் அந்த நபர் வெடிபொருள் எதுவும் வைத் திருக்கவில்லை என்றும் வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தீவிர சோதனை நடத்தி யதில் வெடிபொருள் எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக் கப்படவில்லை என்றும் பிரசல்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை களை ஒருங்கிணைக்கும் பேரிடர் மையம் பெல்ஜியப் பிரதமர் சார்ல்ஸ் மைக்கலுடன் அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்திற்குப் பின்னர் பேசிய பிரதமர் சார்ல்ஸ் மைக்கல், தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறினார். பாரிசில் நவம்பர் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் குறிப்பாக பிரசல்ஸ் நகரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரசல்ஸ் நகரில் உள்ள பேரங்காடி நிலையங்களில் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் சிட்டி 2 பேரங்காடியில் பாதுகாப்பு சென்ற வாரம் வலுப் படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பிரசல்ஸ் விமான நிலையத் திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 32 பேர் உயிரிழந் தனர்.

பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் உள்ள சிட்டி2 பேரங்காடி நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒருவன் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு சோதனை மேற்கொண்டனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!