பிரிட்டன் விலகினாலும் நான் விலக மாட்டேன்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் விலக வேண்டாம் என்றும் அதிலிருந்து வெளியேறுவதை ஆதரித்து வாக்களிக்க வேண்டாம் என்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தாலும் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்றும் திரு கேமரன் கூறியுள்ளார். "ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தால், பிரிட்டிஷ் மக்கள் மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறையினரும் பாதிக்கப்படுவர்," என்றும் கேமரன் எச்சரித்தார்.

"உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து உறுப்பு நாடாக இருப் பதற்கு ஆதரவாக வாக்களி யுங்கள்," என்று திரு கேமரன் பிரிட்டிஷ் மக்களை கேட்டுக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டாம் என பல்வேறு நாடுகளின் தலைவர் களும் முதலீட்டாளர்களும் நிறுவனத் தலைவர்களும் வலி யுறுத்தி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால் ஐரோப் பிய பகுதியில் அதன் அதிகாரம் குறைந்து விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருப்பதை 45 விழுக்காட்டினர் விரும்புவதாகவும் 44 விழுக் காட்டினர் அந்த அமைப்பிலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதை ஆதரிப்பதாகவும் தெரிவித் துள்ளனர்.

லண்டனில் நடந்த பிபிசி விவாதத்தில் லண்டன் முன்னாள் மேயரும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான போரிஸ் ஜான்சன், டேவிட் டிம்பில்பி, பிரிட்டிஷ் தொழிற்கட்சி எம்பி ஜிசிலா ஸ்ட்வாட், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ட்ரா லிட்சம், ஸ்காட்டிஷ் கன்சர்வேடிவ் தலைவர் ருத் டேவிட்சன், லண்டன் மேயர் சாதிக் கான், பிரான்சிஸ் கிரேடி ஆகியோர் பங்கேற்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!