துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா கோரி செனட் சபையில் உள்ளிருப்புப் போராட்டம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா கோரி அந்நாட்டின் ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையில் நேற்று உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பாக வாக்களிப்பை நடத்த குடியரசுக் கட்சியின் தலைமைத்துவம் இணக்கம் தெரிவிக்கும்வரை செனட் சபை யைவிட்டு வெளியேறப்போவ தில்லை என்று ஜனநாயகக் கட்சியினர் சூளுரைத்துள்ளனர். துப்பாக்கிக் கட்டுப்பாடு தொடர்பான நான்கு மசோதாக் களை அமெரிக்க செனட் சபை அண்மையில் நிராகரித்தது. இதனை எதிர்க்கும் வண்ணம் இந்த உள்ளிருப்புப் போராட்டம் அமைந்துள்ளது.

கடந்த 12ஆம் தேதி ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிக்காரன் ஒருவன் 49 பேரைக் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி கட்டுப் பாடுகளை இன்னும் கடுமையாக்கு வது குறித்த யோசனைகள் அமெரிக்க செனட் சபையில் முன் வைக்கப்பட்டன. 'மசோதா கொண்டு வரப் படாவிடில் செனட் சபையைவிட்டு வெளியேறமாட்டோம்' என்ற முழக்கத்துடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் சபையினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். "நாங்கள் நீண்டதொரு போராட்டத்துக்குத் தயாராக இருக்கிறோம்," என்று செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் நேன்சி பெலோசி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!