அச்சத்திலும் ஆனந்தத்திலும் பிரிட்டிஷ் மக்கள்

லண்டன்: ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்­டன் பிரிந்து செல்­வதற்­குச் சாத­க­மாக வாக்­கெ­டுப்பு முடி­வு­கள் இருப்­ப­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து, பிரிட்­டிஷ் பவுண்­டின் மதிப்பு 31 ஆண்­டு­களில் இல்லாத அள­வுக்­குச் சரிந்தது. பிரிட்­டன் பிரிந்து செல்வதை ஆத­ரித்து 51.9 விழுக்­காட்டு வாக்­கு­களும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­ து­டன் தொடர்ந்து இணைந்­தி­ருப்­பதை ஆத­ரித்து 48.1% வாக்­கு­களும் பதி­வா­கின. 28 நாடு­களின் கூட்டான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை விட்டுப் பிரிந்து செல்லும் முதல் நாடு பிரிட்­டன். அதன் எதிர்­கா­லம் எப்படி இருக்­கும் என்பது குறித்து பல­வி­த­மான மாறு­பட்ட கருத்­து­கள் நில­வு­வதை அடுத்து பிரிட்­டனைச் சேர்ந்த வர்த்­த­கங்களின் பங்கு விலை­களும் சரிந்தன.

பாதிக்­குச் சற்று அதி­க­மா­னோர் நேற்றைய தினத்தை சுதந்­தி­ர­தி­ன­மா­கக் கொண்டாடினா ­லும் மறு­சா­ரார் இந்த முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த­து­டன் எதிர்­கா­லம் பற்றிய பயத்­தில் ஆழ்ந்த­னர். மத்திய, வடக்கு இங்­கி­லாந்து வாக்­கா­ளர்­கள் பிரிட்­டன் பிரிந்து செல்வதை ஆத­ரித்­ததே இந்த முடிவு எட்­டப்­படு­வதற்­குக் காரணம் என வாக்கு எண்ணிக்கை ­யின்­போது அறி­யப்­பட்­டது. ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்டன் பிரிந்து சென்றால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­கள் பற்றி பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் எச்­ச­ரித்­தி­ருந்த­ போ­தும் அவை சிறிய அளவு தாக்­கத்தையே ஏற்­படுத்­தி­யி­ருப்­பது வாக்­கு­களில் தெளி­வா­னது.

ஐரோப்­பிய ஒன்­றி­யம், காமன்­வெல்த் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த பிரிட்­டன்­வா­சி­களுக்­கும் இந்த முடிவு ஏமாற்­றத்தையே தந்­ துள்­ளது. பிரிட்­டிஷ் பிர­த­மர் டேவிட் கேமரன் பதவி வில­கப்­போ­வ­தாக அறி­வித்­ததை அடுத்து, அக்­டோ­பர் மாத வாக்கில் அமை­ய­வி­ருக்­கும் புதிய அரசில் லண்ட­னின் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன் பிர­த­மர் பதவிக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­லாம் எனக் கூறப்­படுறது. அதுவரை பிரிட்­ட­னின் நிலைத்­தன்மைக்­காக பாடு ­ப­டப்­போ­வ­தாக கேமரன் அறி­வித்­துள்­ளார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்­டன் பிரிந்து சென்றதை சாதா­ர­ண­மா­கக் கரு­தக்­கூ­டாது எனவும் அது ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் மேலும் பிள­வு­களை ஏற்­படுத்­தி­வி­டக்­கூ­டிய அபா­யத்தைக் கருத்­தில் கொள்ள வேண்டும் எனவும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். இந்தப் பிரிவு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கு ஒரு பேரிடி என்று குறிப்­பிட்ட அவர் ஒன்­றி­யத்­தில் இருக்­கும் மற்ற 27 நாடு­களும் செயல்­பாடு­களை­யும் தாக்­கங்களை­யும் நன்கு ஆராய்ந்து முடி­வு­களை எடுப்­பது அவ­சி­யம் என்றும் கூறினார். ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருக்­கும் நாடுகள் தொடர்ந்து இணைந்­தி­ருக்க வேண்­டு­மானால் ஒன்­றி­யத்­தில் மறு­சீ­ரமைப்பு அவ­சி­யம் என இத்­தா­லிய பிர­த­மர் மேட்டியோ ரென்ஸி கூறி­னார். ஜெர்மன் அதிபர், பிரெஞ்சு அதிபர், இத்­தா­லிய பிர­த­மர், ஐரோப்­பிய மன்றத் தலைவர் ஆகிய தலை­வர்­கள் நாளை மறு­தி­னம் பெர்­லி­னில் சந்­தித்து பிரிட்­ட­னின் இந்த முடிவு குறித்து கலந்தா­லோ­சிக்க உள்­ள­னர்.

உலகின் ஐந்தா­வது பெரிய பொரு­ளி­யல் நாடான பிரிட்­டன் பிற நாடு­களு­டன் வர்த்­த­கத் தொடர்பை ஏற்­படுத்­திக்­கொள்­வதற்கு சில­ கா­லம் பிடிக்­கும் என்­ப­தால் வர்த்­த­கர்­களிடையே நிலவிய அச்­சத்­தால் பங்­குச்­சந்தை­யில் பலர் பிரிட்டிஷ் பவுண்­டு­களை­யும் பங்­கு­களை­யும் விற்க முயன்ற­னர். பிரிட்­டன் வர்த்­த­கத் தொடர்­பு­களை வலுப்­படுத்­திக் கொள்­வதற்கு ஐரோப்­பிய ஒன்­றி­யம் முன்­வந்து உதவி­கள் எதுவும் செய்யாது என்று ஐரோப்­பி­யக் குழுவின் தலைவர் ஜீன் க்ளாட் ஜங்கர் கூறி­யுள்­ளார். உலக அளவில் பிரிட்­டன் தன் வர்த்­த­கத்தை வலுப்­படுத்­திக்­கொள்ள பத்து ஆண்­டு­கள் வரை ஆகலாம் என கவ­னிப்­பா­ளர்­கள் கருத்­துரைத்­துள்­ள­னர்.

அடுத்த ஆண்டில் பிரிட்­ட­னின் பொரு­ளி­யல் நிலைமை மோச­மா­கக்­கூடும் எனவும் அது 5.6% வரை சரிவைச் சந்­திக்­கும் எனவும் அனைத்­து­லக பண நிதியம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளாது. மேலும் வேலை­யில்­லா­தோர் விகிதம் 6% வரை உயரும் எனவும் கூறப்­படு­கிறது. பிரிட்­ட­னி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான வேலைகள் ஃப்­ராங்­ஃ­பர்ட், பாரிஸ் போன்ற நக­ரங்களுக்கு மாற்­றப்­படும் என நிறு­வ­னங்கள் ஏற்­கெ­னவே எச்­ச­ரிக்கை விடுத்­தன. புதிய பொரு­ளி­யல் கொள்கை­களால் வர்த்­தக உலகம் வெகு விரைவாக சூழ­லுக்­கேற்ப தன்னை மாற்­றிக்­கொள்­ளும் என பிரிட்­டன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­ல் இ­ருந்து பிரிந்து செல்வதை ஆத­ரிக்­கும் குழு­வி­னர் கூறு­ கின்ற­னர்.

பிரிட்டன் ஐரோப்பாவுடன் தொடர்ந்து நீடித்திருப்பதை ஆதரிப்போர் மத்திய லண்டனில் உள்ள லெக்ஸ்டிங்கன் மதுக் கூடத்தில் கூடியிருந்தனர். முடிவுகளை அறிந்து பிரிட்டனின் எதிர்காலம் எவ்வாறிருக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தினர். படங்கள்: என்வைடி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!