ஏடிஎம் வளாகங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு, 2 இடங்களில் கொள்ளை

சாபா­வி­லுள்ள தானி­யங்கி பணம் வழங்­கும் இயந்­தி­ரம் (ஏடிஎம்) அமைந்­துள்ள அறையின் கண்­ணா­டிக் கத­வு­கள் வெடி வைத்துத் தகர்க்­கப்­பட்­டுள்­ளன. நேற்று அதிகாலை 4.20 மணி­ய­ள­வில் இந்த சம்ப­வம் நிகழ்ந்த­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த வளா­கத்­தில் வெடிச் சத்தம் கேட்­ட­தாக அப்­ப­கு­தி­யில் இருந்­தோர் கூறி­யுள்­ள­னர். சென்ற மாதம் 12ஆம் தேதி மூன்று திரு­டர்­கள் மெம்பா­குட் நகரில் உள்ள ஏடிஎம் வளா­கத்தை­யும் வெடி வைத்துத் தகர்த்து 70,000 மலேசிய ரிங்­கிட்­டு­களைக் கொள்ளை­யிட்­ட­னர். அதிகாலை 1.20 மணி­ய­ள­வில் நடந்த அச்­சம்ப­வத்­தில் ஈடு­பட்ட கொள்ளை­யர்­கள் கறுப்பு நிற ஹோண்டா சிஆர்வி வாக­னத்­தில் சென்ற­தா­கக் கூறப்­பட்­டது. படம்: ராய்ட்டர்ஸ்