‘கிண்ணம் வெல்லவே வந்துள்ளோம்’

பாரிஸ்: யூரோ தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஆளுக்கு ஏழு கோல்களைப் போட்டு தங்களது அணிகளை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றிய பெருமை வேல்ஸ் நாட்டின் கேரத் பேல், வட அயர்லாந்தின் கைல் லஃபெர்ட்டி ஆகிய இருவருக்குமே உண்டு. இந்நிலையில், நடப்பு யூரோ தொடரில் மூன்று கோல்களை அடித்து அதிக கோலடித்தோர் வரிசையில் முதலிடத்தில் இருக் கும் ரியால் மட்ரிட் குழு வீரர் கேரத் பேல், கிண்ணம் வெல்வது தான் தமது அணியின் இறுதி இலக்கு என்று தெரிவித்துள்ளார். "உண்மையில், கிண்ணத்தைக் கைப்பற்றுவது என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே இந்தத் தொடரில் பங்கெடுக்க நாங்கள் வந்திருக்கிறோம். மூன்று போட்டி களில் மட்டும் விளையாடிவிட்டு வீடு திரும்புவதற்காக அல்ல!" என்று அவர் சொன்னார்.

இது எல்லா அணிகளும் வழக் கமாகக் கூறும் ஒன்றுதான் என்றா லும் ஒவ்வோர் ஆட்டமாக நாங்கள் அணுகி வருகிறோம் என்ற அவர், இப்போதைக்குத் தங்கள் கவனம் எல்லாம் இன்று நடக்கவுள்ள வடஅயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் மீதே இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

வடஅயர்லாந்து அணியைப் பற்றிக் கேட்டபோது, "தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தங்கள் பிரிவில் அவர்கள் முதலிடம் பிடித்தனர். அது ஏதோ தவறுதலாக நடந்தது அல்ல! எங்களைப் போன்ற குழு உணர்வு அவர்களி டமும் காணப்படுகிறது," என்று பதிலளித்தார். அதே வேளையில், தமது அணியைவிட தற்காப்பில் வட அயர்லாந்து சற்று மேம்பட்டிருக் கிறது என்றும் ஆகையால் அதை உடைத்து முன்னேறுவது கடினம் தான் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நடப்பு யூரோ தொடரில் இன்னும் கோல் கணக்கைத் தொடங்காத கைல் லஃபெர்ட்டி, தங்களால் எந்த ஓர் அணியையும் வீழ்த்த முடியும் என்று திடமாக நம்புவதாகக் கூறினார். "எங்களது அணியைப் பார்க் கும்போது, அதிர்ஷ்டமும் சிறிது கைகொடுத்தால் சில முன்னணிக் குழுக்களை மண்கவ்வச் செய்ய இயலும்," என்றார் அவர்.

தங்களது அணியின் மிகப் பெரிய சவால் கேரத் பேலை கோல் போடவிடாமல் தடுப்பதுதான் என்று அவர் குறிப்பிட்டார். "பேலின் கோல் வேட்டைக்கு முட்டுக்கட்டை போடுவது சவா லான விஷயமே. அவரைப் போன்ற திறன்மிக்க ஓர் ஆட்டக்காரர் இருப்பது வேல்ஸ் அணிக்குப் பெரிய பலம். இருப்பினும் அவர் களது பலங்கள் என்ன என்ப தையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளும்படியான அவர்களது பலவீனங்கள் என்ன என்பதையும் ஆராய்ந்து வருகிறோம் ," என்றார் அவர்.

யூரோ கிண்ணத்தைத் தங்களால் வெல்ல முடியும் என்று மார்தட்டும் வடஅயர்லாந்தின் கைல் லஃபெர்ட்டி (இடது), வேல்ஸ் அணியின் கேரத் பேல். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!