ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து விவாதம்

பெர்லின்: ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றி யத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் நேற்று அவசரக் கூட்டத்தை நடத்தின. அந்த அமைப்பை நிறுவிய ஆறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர் கள் பெர்லின் நகரில் ஒன்று கூடினர். ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், லக்சம்பெர்க் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தற் போதைய ஐரோப்பிய அரசியல் பிரச்சினைகள் குறித்து அவசர ஆலோசனை நடத்தியதாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சு அறிக்கை கூறியது.

ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் பயன் அளிக்கும் சிறந்த அமைப்பாக உருவாக்குவதற்கான வலுவான தீர்மானங்களை பிரான்சும் ஜெர்மனியும் நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கவிருப்பதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன் மார்க் அயுரால்ட் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் எடுத்துள்ள முடிவு ஐரோப்பாவுக்கு பெரும் பின்னடைவு என்று குறிப்பிட்ட ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றியத்தை சீரமைப்பதற்கான திட்டம் குறித்து ஆராய பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்குடனும் சேர்ந்து வரும் திங்கட்கிழமை பெர்லினில் பேச்சு நடத்தவிருப்பதாகக் கூறி யுள்ளார்.

வெளியேற பிரிட்டன் எடுத்த முடிவு குறித்து தான் மிகவும் வருந்துவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளவுட் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, அல்லது விலகுவதா என்பது குறித்து பிரிட்டனில் வியாழக்கிழமை நடந்த கருத் தறியும் வாக்கெடுப்பில், அதி லிருந்து விலகுவது என்று மக்கள் எடுத்துள்ள முடிவு அதிர்ச்சியும் ஏமாற்றமும் தருவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித் துள்ளன.

அதே நேரத்தில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!