பிரான்சில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

பாரிஸ்: பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதாக போலிஸ் ஆணையாளர் ஒருவர் கூறினார். அந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயதுச் சிறுமி காயம் அடைந்ததாகவும் அவர் சொன்னார். ஒரு வீடமைப்புப் பேட்டை கார்ப்பேட்டையில் அவ்விருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்நகரம் குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கக்கூடிய இடம் என்றும் இந்த ஆண்டில் 6 பேர் அந்நகரில் சுட்டுக்கொல்லப் பட்டதாகவும் போலிசார் கூறினர்.