சீனாவில் சூறாவளி: மக்கள் தவிப்பு

பெய்ஜிங்: சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் சுழன்று அடித்த சூறாவளிக் காற்றில் சிக்கி குறைந்தது 98 பேர் உயிர் இழந்ததாகவும் சுமார் 800 பேர் காயம் அடைந்ததாகவும் ஊடகத் தகவல்கள் கூறியுள்ளன.

அந்த மாநிலத்தில் உள்ள யான்செங் நகரிலும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளிலும் கடந்த வியாழக்கிழமை பயங்கர சூறாவளிக் காற்று வீசியது. மணிக்கு, 125 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால் ஏராளமான கட்டடங்களின் கூரைகள் பெயர்ந்து விழுந்தன. சில இடங்களில் வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

பலத்த காற்றில் பல வாகனங்கள் அடித்துச் செல் லப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்புப் பணிகளை தீவிரப் படுத்துமாறு அதிகாரிகளுக்கு சீன அதிபர் சி ஜின்பிங் உத்தர விட்டுள்ளார்.

சூறாவளிக் காற்றில் இடிந்து விழுந்து தரைமட்டமான ஒரு வீட்டினுள் அந்த வீட்டு உரிமையாளர் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!