வெஸ்ட் வெர்ஜினியாவுக்கு பேரிடர் உதவி

சால்ஸ்டன்: அமெரிக்க மாநிலம் வெஸ்ட் வெர்ஜினியா வில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 24க்கு உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து அந்த மாநிலம் மிக மோசமான பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள தாக அதிபர் ஒபாமா கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உதவிகளை உடனடியாக வழங்க அதிபர் ஒபாமா ஆணையிட்டுள்ளார்.

இதன் விளைவாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாடும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அவர் களுக்குத் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் மின்தடை ஏற்பட்டு ஆயிரக் கணக்கானோர் வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் பல வீடுகள் அழிந்துவிட்டன.2016-06-27 05:55:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி