‘புடவை அணியக்கூடாது’ என்றது அழைப்பிதழ்; மன்னிப்பு கேட்க எம்.பி. வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா: ஈப்போ நகர மன்றத்தின் ஊழியர்களுக்கான நோன்புப் பெருநாள் விருந்தில் புடவை அணிந்து வரக்கூடாது என்ற விதிமுறை மன்றத்தின் அழைப்பிதழில் இடம்பெற்றதை அடுத்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. விருந்துக்கு வருபவர்கள் அவரவர் பாரம்பரிய உடைகளில் வரலாம் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் புடவைக்கு மட்டும் தடை விதிக்கப் பட்டிருந்தது.

ஈப்போ நகர மன்றத்தின் இந்தச் செய்கையை எதிர்த்து பேராக் மாநிலத்திலுள்ள பத்து காஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு வி. சிவகுமார் வன்மையாகச் சாடியுள்ளார். நகர மன்றத்தின் செயல் இந்தியர்களின் பாரம்பரிய ஆடையை இழிவுப்படுத்தியுள்ள தாக எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த திரு சிவகுமார் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து நகர மன்றம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் "இன ரீதியான பிரச்சினையைத் தூண்டிவிடுவது எனது நோக்க மல்ல. ஆனால் இந்திய சமூகத் தினர் இழிவுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த எதிர்ப்பைக் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

"விருந்துக்கு வருபவர்கள் அவரவர் பாரம்பரிய உடைகளில் வரலாம் என்றும் ஆனால் புடவை அணிந்துகொண்டு வரக்கூடாது என்றும் தெள்ளத் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது," என்றார் திரு சிவகுமார். இதற்கிடையே, ஊழியர்கள் விருந்துக்குப் புடவை அணிந்து வரலாம் என்று ஈப்போ நகர மன்றம் தெரிவித்துள்ளது. அழைப் பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடை களுக்கான விதிமுறை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அது கூறியது. எந்த ஓர் இனத்தையும் இழிவுப்படுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்த ஈப்போ நகர மன்றம் இந்த விவகாரத்துக்குக் கூடிய விரைவில் சமூகமான தீர்வு காண விருப்பம் தெரிவித்தது.

புடவை அணியக்கூடாது என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சாடிய திரு வி. சிவகுமார். படம்: தகவல் சாதனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!