மஇகா துணைத் தலைவர் தேவமணிக்குப் பதவி

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தமது அமைச்சரவை யில் செய்யப்படும் சில மாற்றங்கள் குறித்து நேற்று பிற்பகல் அறிவிப்பு செய்தார். இரண்டு நாடாளுமன்ற உறுப் பினர்களை அமைச்சர்களாக அவர் நியமனம் செய்துள்ளார். தமக்கு ஆதரவாக இருக்கும் இருவருக்கு கூடுதல் அதிகார முள்ள பதவிகளைத் திரு நஜிப் வழங்கியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது, நான்கு பேருக்குத் துணை அமைச்சர் பதவியையும் அவர் வழங்கியுள்ளார். இந்நிலையில், யாரும் எதிர் பார்க்காத வகையில் இரண்டாவது நிதி அமைச்சரான அகமது ஹுஸ்னி ஹனஸ்ட்லா பதவி விலகியுள்ளார்.

மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான 1எம்டியிலிருந்து பல மில்லியன் அமெரிக்க டாலர்களை திரு நஜிப் தமது சொந்த வங்கி கணக்குக்கு மாற்றியதாக வெளி வந்த தகவலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து மலேசிய அமைச்சரவை மாற்றியமைக்கப் படுவது இதுவே இரண்டாவது முறை. இம்முறை அம்னோவிலும் தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளிலும் தமக்கு ஆதரவாக இருப்போருக்குத் திரு நஜிப் பதவி உயர்வு தந்துள்ளார். கோலாலம்பூரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜொஹாரி அப்துல் கனி இரண்டாவது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னோர் அமைச்சர் பதவி சிலாங்கூரைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினரான திரு நோ ஒமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் நகர நல்வாழ்வு, வீடமைப்பு அமைச்சர் பொறுப்பை ஏற்கிறார். திரு நஜிப்பின் நெருங்கிய விசுவாசியும் 1எம்டி விவகாரத்தில் அவரைத் தற்காத்துப் பேசிய வருமான திரு அப்துல் ரஹ்மான் டாலானுக்குப் பிரதமர் அலுவலக அமைச்சர் பதவி வழங்கப் பட்டுள்ளது. மலேசியாவின் சமூகப் பொரு ளியல் இலக்குகளை வகுக்கும் பொருளியல் திட்டப் பிரிவுக்குத் திரு அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குவார்.

மஇகா துணைத் தலைவர் திரு எஸ்.கே தேவமணி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி