பிரதமர் வேட்பாளர் கிரேப்: குடிநுழைவுக்கு முன்னுரிமை

லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் வேட்பாளராக தம்மை அறிவித்துக் கொண்டுள்ள டேவிட் கிரேப், நாட்டின் குடிநுழைவுக் கொள்கையை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே தமது முக்கியமான பணியாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்பொழுது பிரிட்டிஷ் பிரதமராக உள்ள திரு டேவிட் கேமரனின் அமைச்சரவையில் வேலை, ஓய்வூதியத் துறை களுக்கான அமைச்சராக விளங்கும் இவர், சென்ற வாரம் ஐரோப்பிய ஒன்றியத் தில் பிரிட்டன் நீடித்திருப்பது பற்றிய பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் அதில் நீடித்திருக்க வேண்டும் என்ற அணியின் சார்பாக பிரசாரம் செய்து வந்தார். அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட பொது மக்களில் 52 விழுக்காட்டினர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்ததால் திரு டேவிட் கேமரன் பிரதமர் பதவியை துறப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடை பெறவுள்ள கன்சர்வேடிவ் கட்சியின் மாநாட்டில் நாட்டின் அடுத்த பிரதமர் தேர்ந் தெடுக்கப்படுவார். "தலைமைத்துவத்துக்கு நடைபெறவுள்ள போட்டியை ஒன்றியத்தில் இருப்பதற்கு ஆதரவளித்தவர், ஒன்றியத் திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவளித்தவர் என பிரி வினைவாத அடையாளங்களை ஏற்றுக்கொள்ள முடியாது," என்றும் கட்சியில் ஒற்றுமை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தி டெய்லி டெலி கிராஃப் செய்தித்தாளுக்கு எழுதிய கட்டுரையில் கேட்டுக் கொண்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் மக்களின் முடிவு தெளிவாக உள்ளதாகக் கூறிய திரு கிரேப், இந்தப் பிரச்சினையில் இரண்டாவது பொது வாக்கெடுப்பு என்ற பேச் சுக்கே இடமில்லை என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!