ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மீண்டும் பிரசல்ஸில் பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் பிரசல்ஸில் இரண்டாவது நாளாக நேற்று பேச்சு நடத்தினர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பிரசல்ஸில் இரண்டாவது நாளாக நீடித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக தீர்மானித்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரசல்ஸில் ஒன்றுகூடினர். பிரெஞ்சு அதிபர் ஹொலாண்ட் (இடது), பெல்ஜியப் பிரதமர் சார்ல்ஸ் மைக்கல், லக்சம்பர்க் பிரதமர் ஸேவியர் பெட்டல் ஆகிய மூவரும் உரையாடிக்கொண்டிருக்கும்போது ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அங்கு அமர்ந்திருக்கிறார். பிரிட்டனின் வெளியேறும் முடிவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. படம்: ஏஎஃப்பி