காற்றுத் தூய்மைக்கேடு; உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும்

ஸ்டாக்ஹோம்: காற்று தூய்மைக்கேடு பாதிப்பு தொடர்பாக ஆண்டுக்கு 6.5 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலகளவில் வெளியாகும் புகையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் உயர் ரத்த அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் புகை பிடித்தல் ஆகியவை உடல்நலத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. நான்காவதாக காற்று மாசுபாட்டால் இறப்பேரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அமிலம், உலேகம், மண், தூசு, சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு பேன்றவை காற்றில் அதிகமாக கலக்கும்பேது காற்று அசுத்தமடைகிறது. காற்றில் கலந்துள்ள மிகச்சிறிய பெருட்களை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநேய், பக்க வாதம், இதயக் கேளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி