‘கைதான பினாங்கு முதல்வர் பதவி விலகத் தேவையில்லை’

ஜார்ஜ் டவுன்: நேற்று முன்­தி­னம் கைது­செய்­யப்­பட்ட பினாங்கு முத­லமைச்­சர் லிம் குவான் எங் மீது பினாங்கு உயர்­நீ­தி­மன்றத்­தில் 2 ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. சந்தை விலைக்­குக் குறை­வாக வீடு வாங்­கி­யது, பத­வியைப் பயன்­படுத்தி நில விற்­பனைக்கு ஒப்­பு­தல் வழங்­கி­யது போன்றவையே அந்தக் குற்­றச்­சாட்­டு­கள். ஜன­நா­யக செயல் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ள­ரான திரு லிம், நேற்று வர்த்­த­க­ரான குமாரி பாங் லி கூன் என்­ப­வ­ரு­டன் மலே­சி­யா­வின் ஊழல் தடுப்­புப் பிரி­வால் கைது செய்­யப்­பட்­டார்.

திரு லிம்­முக்கு எதி­ரான அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை மலே­சிய தலைமைச் சட்ட அதி­காரி அபாண்டி அலி நேற்று காலை பினாங்கு உயர்­நீ­தி­மன்றத்­தில் விளக்­கினார். பினாங்கு அமர்வு நீதி­மன்றத்­தால் விசா­ரிக்­கப்­பட்ட இந்த வழக்கு அர­சாங்க வழக்­க­றி­ஞர் கேட்­டுக் கொண்டதை­ய­டுத்து உயர்­நீதி மன்றத்­திற்கு மாற்றப்பட் டது. திரு லிம் மீது ஊழ­லுக்கு எதி­ரான சட்டப் பிரிவு 23ன் கீழ் குற்றம் சாட்­டப்­படும். பிரிவு 23ன்படி குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் 20 ஆண்­டுச் சிறைத் தண்டனை­யும் அப­ரா­த­மாக ஊழ­லாக பெற்ற தொகையை 5 மடங்காக திருப்­பிச் செலுத்த வேண்­டும். குமாரி பாங் திரு லிம்மின் பின்யார்ன் ரோட்டிலுள்ள வீட்டின் முன்னாள் உரிமையாளர். அந்த வீட்டை பின்னர் 2.8 மில்லியன் ரிங்கிட்டுக்கு திரு லிம் வாங்கிய தாகக் கூறப்படுகிறது.

இரண்டு குற்றச்சாட்டுகளையும் திரு லிம் மறுத்துள்ளார். நீதி மன்றம் திரு லிம்முக்கு 1மில்லியன் ரிங்கிட் பிணை வழங்கியுள்ளது. பிணை பெற்ற திரு லிம் வெளி நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே உயர் நீதிமன்றத்திற்கு அது பற்றி தெரிவிக்க வேண்டும். 55 வயதாகும் திரு லிம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநிலத்தின் முதலமைச் சராகப் பதவி வகிக்கிறார். கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் முதன்முதலாக நேற்று மதியம் திரு லிம் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசினார். இந்த வழக்கில் கடைசி வரை போராடி வெற்றி பெறுவேன் என்று தனது ஆதரவாளர்களிடம் உறுதி தெரிவித்தார்.

"மண்டியிட்டு வாழ்வதைக் காட்டிலும், நெஞ்சை நிமிர்த்தி சாவதே மேல்," என்று அங்கிருந்த கூட்டத்தினரிடமும் கட்சித் தலை வர்களிடம் பேசினார். "நான் பதவியில் இருப்பது பற்றி ஜனநாயகக் கட்சிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதுவரையிலும் முதல்வராக எனது பணியைத் தொடர்வேன்," என்று செய்தியாளர் கேட்ட ஒரு கேள்விக்குப் பதி லளிக்கையில் இவ்வாறு கூறியுள் ளார். இந்நிலையில் அம்னோ கட்சி யினர் திரு லிம் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!