மின்னல் வேகத்தில் செயல்பட்டிருந்தால் இஸ்தான்புல் தாக்குதலை தடுத்திருக்கலாம்: பாதுகாப்பு வல்லுநர்

விமான நிலை­யங்களில் பயங்க­ர­வா­தி­களை எதிர்­கொள்­ளும்­போது பாது­காப்­புப் படை­யி­னர் மின்னல் வேகத்­தில் செயல்­பட வேண்­டும். இல்லை­யெ­னில் இஸ்­தான்புல், பிர­சல்ஸ் ஆகிய நக­ரங்களில் ஏற்பட்ட நிலைமை­தான் ஏற்­படும் என்று அனைத்­து­லக விமான நிலைய பாது­காப்பு வல்­லு­நர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார். இஸ்­தான்­புல்­லில் தாக்­கு­தல் நடத்­திய பயங்க­ர­வா­தி­கள் தொடக்கத்திலேயே துப்­பாக்­கிச் சூடு நிகழ்த்­தி­யதே அவர்­க­ளது தந்­தி­ர­மாக இருந்தது. இந்த நேரத்­தில் பாது­காப்­புப் படை­யி­னர் மின்னல் வேகத்­தில் செயல்­பட்­டி­ருந்தால் பயங்க­ர­வா­தி­களை உடனே சுட்டு வீழ்த்­தி­ இ­ருக்­கலாம்.

இத்தனை உயிர்­களைப் ­பலி கொடுத்­தி­ருக்க வேண்டாம் என்று பாது­காப்பு வல்­லு­நர் ரஃபி ரோன் கூறினார். இவர் டெல் அவிவ் பென் குரி­யன் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் பாது­காப்­புத் துறைத் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். "தற்­காப்­புத் தந்­தி­ரங்களை நான் வெளிப்­படை­யா­கப் பகிர்ந்­து­கொள்ள விரும்ப­வில்லை. மின்னல் வேகத்­தில் செயல்­பட்டு இது­போன்ற அசம்பா­வி­தங்களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு ஏரா­ள­மான வழி­கள் உள்­ளன," என்று அவர் கூறினார். "பயங்க­ர­வா­தி­களின் முக்­கிய இலக்­காக விமான நிலை­யங்கள் உள்­ளன. ஐந்து ஆண்­டு­களுக்கு முன் மாஸ்­கோ­வில் நிகழ்ந்த குண்­டு­வெ­டிப்­பில் ஏரா­ள­மா­னோர் உயி­ரி­ழந்த­னர்.

வியன்னா, பாரிஸ், ரோம் ஆகிய நக­ரங்களில் 1970ல் தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இது­போன்ற தாக்­கு­தல்­களைத் தடுத்து நிறுத்த நிறைய வழி­கள் உண்டு என்­கிறார் டெல்­அ­விவ் விமான நிலை­யத்­தில் இப்­போதுள்ள பாது­காப்­புக் கட்­டமைப்­பு அமைவதற்குக் காரணமான திரு ரோன். மேற்­கத்­திய நாடு­களில் பயங்க­ர­வா­தத் தாக்­கு­தலை முறி­ய­டிக்­கும் கட்­டுக்­கோப்­பான பாது­காப்பு முறை வழக்­க­மா­கக் கடைப்­பி­டிக்­கும் பாது­காப்பு முறை­யில்லை. தாக்­கு­தல் அபா­யம் உள்ள இடங்களில் பாது­காப்­புத் தந்­தி­ரங்கள் கடைப்­பி­டிக்­கப்­படு­கிறது. பாக்­தாத் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் அரசு சாரா­த­வர்­களின் வாக­னங்கள் நிலை­யத்­தின் முனை­யங்களுக்கு ஓட்­டிச் செல்ல அனு­ம­தி­யில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!