உளவுத்துறை: இஸ்தான்புல் தாக்குதலைப் போல அமெரிக்காவிலும் தாக்கக்கூடும்

இஸ்தான்புல்: துருக்­கி­யின் தலை­ந­க­ரம் இஸ்­தான்­புல்­லில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஐஎஸ் பயங்க­ர­வா­தி­க­ளால் கொடூ­ர­மான தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டது. அத்­தாக்­கு­த­லில் 42 பேர் கொல்­லப்­பட்­ட­னர். நூற்­றுக்­க­ணக்­கா­னோர் காய­மடைந்த­னர். துருக்­கி­யின் பெரிய நக­ரம் ஒன்­றில் நிகழ்ந்த பெரிய தாக்­கு­தல் இதுவே. டாக்­சி­யில் இருந்து தானி­யங்­கித் துப்­பாக்­கி­யு­டன் இறங்­கிய மூன்று பேர் அட்­டாட்­டர்க் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் காத்­துக்­கொண்­டி­ருந்த பய­ணி­களை நோக்கி சர­மா­ரி­யா­கச் சுட்­டுத் தள்­ளி­னர்.

பின்னர் தங்கள் உடம்­பில் கட்­டப்­பட்­டி­ருந்த வெடி­குண்டை வெடிக்­கச் செய்­த­னர். இஸ்­ரேல், ரஷ்யா ஆகிய நாடு­களு­டன் உறவை துருக்கி புதுப்­பித்­துக் கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்­கு­தல் நிகழ்த்­தப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது. இந்தத் தாக்­கு­தலை உல­கத் தலை­வர்­கள் வன்மை­யா­கக் கண்­டித்­துள்­ள­னர். பயங்க­ர­வா­தி­களுக்கு எதி­ராக உல­கம் ஒன்று திரண்டு போராட வேண்­டும் என்று துருக்கி அதி­பர் ரெசெப் எச்­டோன், அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கத்­திய நாடு­களுக்கு அழைப்பு விடுத்­துள்­ளார். இந்தத் தாக்­கு­த­லுக்கு எந்த ஒரு பயங்க­ர­வாத அமைப்­பும் பொறுப்­பேற்­ப­தாக அறி­விக்­க­வில்லை.

பயங்க­ர­வா­தி­களை அடி­யோடு ஒழிக்­கும் வரை போராட துருக்கி தயா­ராக உள்­ளது. அதற்­கான உறு­தி­யும் வலு­வும் துருக்­கி­யி­டம் உள்­ளது என்று அந்­நாட்டு அதி­பர் எர்­டோன் கூறி­யுள்­ளார். துருக்­கி­யில் உள்ள பிரான்ஸ், அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் தூத­ர­கங்கள், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை விட்டு ஒதுங்கி, பாது­காப்­பாக இருக்­கு­மாறு அவற்­றின் மக்­களைக் கேட்­டுக் கொண்­டுள்­ளன. இந்­நிலை­யில் இந்தத் தாக்­கு­தலைப்­போன்ற பெரிய அள­வி­லான தாக்­கு­தல் ஒன்றை அமெ­ரிக்­கா­வில் நிகழ்த்த ஐஎஸ் பயங்க­ர­வா­தி­கள் திட்­ட­மி­டு­வ­தாக அமெ­ரிக்­கா­வின் மத்­திய உள­வுத் துறை­யின் இயக்­கு­நர் ஜான் பிரென்­னன் எச்­ச­ரித்­துள்­ளார். யாஹு செய்தி நிறு­வ­னத்­திற்கு அளித்த பேட்டி ஒன்­றில் திரு ஜான் பிரென்­னன், "இஸ்­தான்­புல் தாக்­கு­த­லுக்­குக் கார­ண­மான ஐஎஸ் பயங்க­ர­வா­தி­கள் இது­போன்ற தாக்­குதலை அமெ­ரிக்­காவில் நிகழ்த்­தா­மல் இருந்தால் நான் ஆச்­ச­ரி­யப்­படு­வேன்," என்று கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!