$225,000ஐ திருப்பி ஒப்படைத்த அகதி

மின்டென்: ஜெர்மனியின் மின்டென் நகரில் வாழும் சிரிய அகதி ஒருவர், தமக்கு நன்கொடையாகக் கிடைத்த அலமாரி ஒன்றில் கிடந்த 50,000 யூரோ டாலரை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். 25 வயது திரு முகம்மது என்பவர் தமக்கு அறக்கட்டளை ஒன்றின் மூலம் கிடைத்த அலமாரியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

அத்துடன் 100,000 யூரோ டாலர்ஸ் சேமிப்புக்கான வங்கிப் புத்தகம் ஒன்றையும் அவர் கண்டெடுத்தார். இதுவரையிலும் இதுபோன்ற பெரிய தொகையை தாம் கண்ணால் கண்டதுகூட இல்லை. சிரியாவில் இருந்து எனது இரு தம்பிகளை ஜெர்மனிக்கு வரவழைக்க இந்தப் பணம் போதுமானதாக இருக்கும் என்றார். இருந்தாலும் இன்னொருவர் பணத்தை நாம் செலவழிக்கக் கூடாது என்று அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டார். பணத்தை உரியவரிடம் சேர்க்கும் முயற்சியில் போலிஸ் ஈடுபட்டு வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!